Advertisment

Punnagai Logo

வினோத சம்பவம் - தானாக கரை ஒதுங்கி தற்கொலை செய்த 28 திமிங்கிலங்கள்..!

ஆஸ்திரேலியாவின் தென்கிழக்குக் கரையில் தானாக கரை ஒதுங்கிய 28 திமிங்கிலங்கள், இறந்துவிட்டன. இந்த வினோத சம்பவம் விஞ்ஞானிகளை குழப்பத்தில் ஆழ்த்தியுள்ளது.

சென்ற வாரயிறுதியில், நியூசிலந்தின் சிறு தீவு ஒன்றில், சுமார் 145 பைலட் வகைத் திமிங்கிலங்கள் மடிந்து கிடந்தன. இதைத் தொடர்ந்து, ஆஸ்திரேலியாவிலும் திமிங்கிலங்கள் கரையில் ஒதுங்கியுள்ளன.

தனியார் விமானத்தைச் செலுத்திக்கொண்டிருந்த விமானி ஒருவர், குரோஜிங்கோலோங் தேசியப் பூங்காவில் (Croajingolong National Park) கரை ஒதுங்கிய 27 பைலட் வகைத் திமிங்கிலங்கள், ஒரு ஹம்ப்பேக் வகைத் திமிங்கிலம் ஆகியவற்றைக் கண்டார். வனத்துறைக்கு தகவல் தெரிவித்தார்.  

வனத்துறை அதிகாரிகள் பூங்காவிற்குச் சென்றபோது திமிங்கிலங்களில் எட்டு இன்னும் உயிருடன் இருந்தன. ஆனால், அவை உயிர்போகும் இறுதிக்கட்டத்தில் இருந்தன. பின் சிறிது நேரத்தில், திமிங்கிலங்கள் அனைத்தும் மாண்டுவிட்டன. ஹம்ப்பேக் வகை திமிங்கிலமும் இறந்துவிட்டது.

இப்படி திமிங்கலங்கள் கூட்டம் கூட்டமாக கரை ஒதுங்கி தற்கொலை செய்துகொள்ளும் வினோத சம்பவம் விஞ்ஞானிகளை குழப்பத்தில் ஆழ்த்தியுள்ளது. அவை திசை மாறி பயணித்தால் வந்த விளைவா, உடல் நலக் குறைவா, பேரலையால் ஏற்பட்ட சோர்வா அல்லது வேறு ஏதேனும் காரணமா என்ற குழப்பங்கள் நீடிக்கின்றன. 

 
 

Advertisment

English Summary

Mass Australian stranding leaves 28 whales dead

 
NewsFast Logo