Advertisment

Punnagai Logo

டிரம்ப்புடன் தனக்கு ரகசிய உறவு இல்லை... நிக்கி ஹாலே விளக்கம்... 

அமெரிக்க அதிபர் டிரம்ப் குறித்த பல்வேறு சர்ச்சைக்குரிய கருத்துக்களை உள்ளடக்கியது பயர் அன் பியூரி புத்தகம். இந்த புத்தகத்தை மிச்சேர் வோல்ப் என்பவர் எழுதியுள்ளார். 

அதிபர் டிரம்ப்பின் அந்தரங்க வாழ்க்கையில் இடம்பெற்ற பல்வேறு ரகசியங்களை இந்த புத்தகம் உலகிற்கு வெளிச்சம் போட்டு காட்டியுள்ளது. இந்நிலையில், இதுகுறித்து கருத்து கூறியுள்ள அமெரிக்க தூதர் நிக்கி ஹாலே, அதிபர் டிரம்ப் மீது பொய்யான குற்றச்சாட்டுகளை அடுத்தடுத்து கூறி வருவது, உச்சபட்ச குற்றமாக கருதுவதாக தெரிவித்துள்ளார்.

டிரம்ப் மீது கூறப்படும் குற்றச்சாட்டுகள் அருவருக்கத்தக்க வகையில் பயர் அன் பியூரி புத்தகம் தெரிவிப்பதாகவும், இதனை வெள்ளை மாளிகை கடுமையாக கண்டிப்பதாகவும் நிக்கி ஹாலே தெரிவித்துள்ளார். 

இதுதவிர, டிரம்ப்புடன் தனக்கு ரகசிய உறவு இருப்பதாக கூறுவதில் உண்மையில்லை என்றும், இதுபோன்ற புரளிகளை மக்கள் நம்பமாட்டார்கள் என்றும் நிக்கி ஹாலே கூறியுள்ளார். 

அதிபர் டிரம்ப்புடன் எதிர்கால அரசியல் குறித்து ஆலோசித்ததாகவும், அப்போது, தன்னுடன் வெள்ளை மாளிகை அதிகாரிகளும் இருந்ததாகவும், பயர் அன் பியூரி புத்தகத்தில் கூறப்பட்டதுபோல், டிரம்பை தாம் தனியாக சந்திக்கவில்லை என்றும் தெரிவித்துள்ளார். 

 

 
 

Advertisment

English Summary

On Rumours Of Affair With Trump, Nikki Haley Says "Highly Offensive"

 
NewsFast Logo