Advertisment

Punnagai Logo

மனைவியை சுட்டுக்கொன்றுவிட்டு தானும் தற்கொலை செய்த பாக். அமைச்சர்...

பாகிஸ்தானின் சிந்து மாகாண அமைச்சராக இருந்தவர்மிர் ஹசர் கான் பைஜாரனி. 71 வயதாகும் இவர், நேற்றை தினம் தனது கராச்சி இல்லத்தில் ரத்தவெள்ளத்தில் மிதந்தபடி உயிரிழந்து கிடந்தார். அவரது மனைவி பாகிரா ரசாக்கும் கொல்லப்பட்டிருந்தார். 

இச்சம்பவம் கொலைச்சம்பவமா என்று விசாரணை நடத்தியதில், அமைச்சர் ஹசர் கான் தனது மனைவியை கொலை செய்துவிட்டு, அதே ஆயுதத்தால், தன்னைத்தானே தாக்கிக்கொண்டு தற்கொலை செய்து கொண்டது தெரிய வந்துள்ளது. 

இந்த விவகாரம் குறித்து வழக்குப்பதி வ செய்துள்ள கராச்சி தெற்கு மண்டல போலீசார், தற்கொலை செய்து கொண்டவர்களின் உடலை பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.   

 
 

Advertisment

English Summary

pak minister kill his wife and then suicide him

 
NewsFast Logo