Advertisment

Punnagai Logo

மயிலுடன் பயணிக்க வந்தவரால் விமான நிலையத்தில் பரபரப்பு...

அமெரிக்காவில் விமானத்தில் பயணிக்க தனது செல்லப்பிராணியான மயிலுடன் வந்தார். வந்தவர் சிறிய அளவிலான செல்லப்பிராணியுடன் வராமல், உருவத்திலும், எடையிலும் அதிகப்படியான பெரிய மயிலுடன் வருகை தந்தார். 

இதனைப் பார்த்த யுனைடெட் விமான நிறுவனம் அவரை விமானத்தில் பயணிக்க அனுமதி மறுத்துவிட்டது. இதனால், அவர் அதிர்ச்சியடைந்தார். இதுகுறித்து விளக்கம் அளித்துள்ள யுனைடெட் ஏர்லைன்ஸ் நிறுவனம், இதுபோன்ற பிராணிகளை விமானத்தில் ஏற்றிச் செல்ல வேண்டுமானால், அதற்கு என்று பிரத்யேக நடைமுறைகள் இருப்பதாகவும், அதனை சம்பந்தப்பட்ட நபர் கடைப்பிடிக்கவில்லை என்று கூறியுள்ளது. 

இதுபோன்ற பறவை அல்லது விலங்குகளை ஏற்றிச் செல்ல வேண்டுமானால், அவற்றை 48 மணிநேரத்திற்கு முன்பாக அழைத்து வரவேண்டும் என்றும், அதனை நன்கு பரிசோதித்து, அவற்றின் செய்கைகள் ஆகியவற்றை கவனித்த பின்னர்தான், அவற்றை ஏற்றிச்செல்ல விமான நிறுவன போக்குவரத்து ஆணையம் அனுமதி அளிக்கும் என்றும், யுனைடெட் ஏர்லைன்ஸ் நிறுவனம் தெரிவித்துள்ளது.

 
 

Advertisment

English Summary

Passenger And Her Peacock Denied Boarding By United Airlines

 
NewsFast Logo