Advertisment

Punnagai Logo

யாசர் அராஃபத் மரணத்தின் பின்னணி - இஸ்ரேல் உள்ளதாக குற்றச்சாட்டு...

மேற்கத்திய நாடுகளின் பத்திரிகையாளரான ரோனன் பெர்க்மேன் என்பவர் ரைஸ் அன் கில் பர்ஸ்ட் என்ற பெயரில் புத்தகம் எழுதி வெளியிட்டுள்ளார். இந்தப்புத்தகத்தில் பாலஸ்தீனம், இஸ்ரேல் விவகாரம் குறித்து பல்வேறு திடுக்கிடும் தகவல்கள் இடம்பெற்றுள்ளன.

சுமார் 600 பக்கங்களைக் கொண்ட ரைஸ் அன் கில் பர்ஸ்ட் ("Rise and Kill First") புத்தகத்தில், பாலஸ்தீனத்தின் மீது இஸ்ரேல் கடந்த 70 ஆண்டுகளில் 2,700 முறை மறைமுக போர் நடத்தியுள்ளதாக குற்றம்சாட்டப்பட்டுள்ளது.

விஷம் கலந்த பற்பசை, ஆயுதம் தாங்கிய தானியங்கி சிறிய விமானம், வெடிக்கும் செல்போன்கள், ரிமோட்-கன்ட்ரோல் வெடிகுண்டு, எதிரி நாட்டு விஞ்ஞானிகளை படுகொலை செய்வது மற்றும் இஸ்லாமி மதத்தை பின்பற்றுபவர்களை குறிவைத்து தாக்குதல் நடத்தியது என்று இன்னும் பல முறைகளை இஸ்ரேல் கடைப்பிடித்துள்ளதாக அந்தப்புத்தகத்தில் பகிரங்கமாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. 

சுமார் ஆயிரம் பேரிடம் நடத்திய நேர்காணல், ஆயிரக்கணக்கான ஆவணங்கள் ஆகியவற்றின் அடிப்படையில் எழுதப்பட்டுள்ள ரைஸ் அன் கில் பர்ஸ்ட் புத்தகம் தற்போது, சந்தையில் அதிவேகமாக விற்பனையாகி வருகிறது. 

இதுதவிர, பாலஸ்தீன அதிபர் யாதர் அராஃபத்தை ஆபத்தான கதீர்வீச்சின் மூலம் கொலை செய்யவும் திட்டமிட்டிருந்தது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த புத்தகத்தால், சர்வதேச அளவில் இஸ்ரேல்-பாலஸ்தீனம் விவகாரம் மீண்டும் ஒருமுறை ஆழ்ந்த விவாதத்திற்கு வித்திடும் என்றால் அது மிகையல்ல...

 
 

Advertisment

English Summary

Poisoned Toothpaste And Exploding Phones: Israel's Proxy For War

 
NewsFast Logo