Advertisment

Punnagai Logo

பொம்மைத் துப்பாக்கியை நீட்டிய நடிகையை.. நிஜ துப்பாக்கியால் சுட்ட போலீஸ் ..! - அமெரிக்க பரிதாபம்..!

1994முதல் 1997வரை தொலைக்காட்சியில் வெளியான இஆர் என்னும் தொடரில் செவிலியர் வெண்டி கோல்டுமேனாக நடித்தவர் வேனசா மார்க்கஸ்.

சீன்பீல்டு, மெல்ரோஸ் பிளேஸ் போன்ற பிரபல தொடர்களிலும் அவர் நடித்துள்ளார். இவர் இஆர் தொடரில் தன்னுடன் நடித்த ஜார்ஜ் குளூனி மீது பாலியல் குற்றச்சாட்டுக் கூறியதுடன், திரைத்துறையில் ஆண் பெண் பாகுபாடு காட்டப்படுவதாகவும் குற்றம்சாட்டியிருந்தார்.

இதையடுத்துத் தான் நடித்துவந்த தொலைக்காட்சித் தொடரில் இருந்து ஓரங்கட்டப்பட்டதாகவும் தெரிவித்தார். இந்தக் குற்றச்சாட்டை ஜார்ஜ் குளூனி மறுத்தார். லாஸ் ஏஞ்சல்சின் புறநகர்ப் பகுதியான பாசடேனாவில் வேனசா மார்க்கஸ் வாடகை வீட்டில் குடியிருந்து வந்தார். 

இந்நிலையில்,அவர் தனக்குச் சிகிச்சை அளிக்கும்படி மனநல மருத்துவர் ஒருவருடன் ஒன்றரை மணி நேரமாகத் தொலைபேசியில் பேசியுள்ளார்.

அவர் சத்தமிட்டு பேசியதை தவறாக புரிந்து கொண்ட வீட்டு உரிமையாளர் அந்த வீட்டில் சச்சரவாக இருப்பதாகக் கூறிக் காவல்துறையினருக்குத் தெரிவித்துள்ளார். காவல்துறையினர் வந்தபோது, வேனசா மார்க்கஸ் அவர்களை நோக்கித் துப்பாக்கியை நீட்டியுள்ளார்.

துப்பாக்கியை ஒப்படைக்குமாறு காவல்துறையினர் கூறியும் மறுத்ததால், அவர்கள் சரமாரியாகத் துப்பாக்கியால் சுட்டனர். இதில் வேனசா மார்க்கஸ் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். 

சோகம் என்னவென்றால் ...வேனசா வைத்திருந்தது பொம்மைத் துப்பாக்கி என்பது பின்னர் தெரிந்தது. 

 
 

Advertisment

English Summary

Police Shot That Shot With Shot - American Pitti!

 
NewsFast Logo