Advertisment

Punnagai Logo

உக்ரேன் - ரஷ்யா போர் ஏற்பட வாய்ப்பு..! உலக நாடுகள் கவலை...!

உக்ரேனுக்கும் ரஷ்யாவுக்கும் இடையே போர் மூளலாம் என்று உக்ரேனிய அதிபர் பெட்ரோ பொரொஷெங்கோ எச்சரித்துள்ளார்.

இரு நாடுகளும் சர்ச்சைக்குரிய சூழ்நிலையை எதிர்நோக்கியுள்ள வேளையில் எல்லையில் ரஷ்யா அதன் இராணுவப் படையினரைக் குவிப்பதாக அவர் குற்றம்சாட்டியுள்ளார். 

ரஷ்யாவுக்கும், கிரைமியா (Crimea) பகுதிக்கும் இடைப்பட்ட கர்ச் (Kerch) நீரிணைப் பகுதியில் கடல் பரப்பில் சண்டை சச்சரவுகள் நிலவுகின்றன. உக்ரேனிய கடற்படை, தங்களது இரண்டு கடற்படை கப்பல்களை ரஷ்யா தாக்கி பறிமுதல் செய்ததாக உக்ரேன் கூறியது.

உக்ரேனின் போர்க் கப்பல்களை ரஷ்ய அதிகாரிகள் பறிமுதல் செய்வது தொடர்கிறது. அண்மையில் 24 உக்ரேனிய மாலுமிகள் கைதுசெய்யப்பட்டனர்.

மாலுமிகள் விடுவிக்கப்படவேண்டும் என்றும் மாஸ்கோ மீது மேற்கத்திய நாடுகள் தடைகளை விதிக்கவேண்டும் என்றும் உக்ரேன் வலியுறுத்தியுள்ளது.

இந்த சர்ச்சையின் காரணமாக அமெரிக்க-ரஷ்ய உறவு பாதிப்படைந்துள்ளது. ரஷ்ய அதிபர் விலாடிமிர் புட்டினுடனான உச்சநிலை மாநாடு இடம்பெறாமல் போகலாம் என்று அமெரிக்க அதிபர் டோனல்ட் டிரம்ப் தெரிவித்துள்ளார்.

சம்பவம் குறித்து நடத்தப்படும் விசாரணையின் முடிவுகளைப் பொறுத்து தாம் திரு. புட்டினைச் சந்திப்பது குறித்து முடிவெடுக்கவுள்ளதாகத் திரு. டிரம்ப் கூறினார்.

இரு நாடுகளுக்கும் இடையே அதிகரித்துள்ள பதற்றநிலையைக் குறைக்க, ஐரோப்பிய ஒன்றியமும், NATO அமைப்பும் வேண்டுகோள் விடுத்துள்ளன. கர்ச் நீரிணையில், சுதந்திரமான நடமாட்டத்துக்கு வழிவிடுமாறு அவை ரஷ்யாவைக் கேட்டுக்கொண்டுள்ளன.

 
 

Advertisment

English Summary

Russian aggression against Ukraine may lead to war

 
NewsFast Logo