Advertisment

Punnagai Logo

இது ஆதி காலத்து "செக்ஸ்" ! - 50 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன் நடந்ததை சொல்லும் ஆராய்ச்சி..!

50 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பே இரு வேறு இனத்தை சேர்ந்த உயிரினங்கள் உடலுறவு கொண்டதற்கான ஆதாரம் ரஷ்யாவின் குகையில் கிடைத்துள்ளது.

அதாவது,தற்போது மேற்கொள்ளப்பட்ட ஆராய்ச்சிகளில் சுமார் 50 ஆயிரம் ஆண்டுகளுக்கு முந்தைய காலத்தை சேர்ந்த ஆதாரங்களில் இருந்து அந்த ஜோடிக்கு ஒரு மகள் இருப்பது கண்டறியப்பட்டுள்ளது.

குகையில் இருந்து கண்டெடுக்கப்பட்ட எலும்பு துண்டுகளின் மரபணுக்களில் இருந்து அந்த பெண் குழந்தையின் தாய் நியாண்டெர்தல் (Neanderthal) என்றும், தந்தை டெனிசோவன் (Denisovan) இனத்தை சேர்ந்தவர் என்றும் தெரியவந்துள்ளது.

நியாண்டெர்தல் (Neanderthal) மற்றும் டெனிசோவன் (Denisovan) என்ற இனங்கள், மனித இனம் என்றாலும் வேறு உயிரின வகையை சேர்ந்தது. இந்த இனங்கள் தற்போது அழிந்துவிட்டன.

நேச்சர் பத்திரிகையில் இது குறித்த தகவல்கள் வெளிவந்துள்ளன.

நியாண்டெர்தல் மற்றும் டெனிசோவன் என்ற இனங்கள் மனித இனத்துடன் நெருங்கிய உறவினர்களாக இருந்தாலும், வேறு வேறு உயிரினங்களே என்று கூறுகிறார் விவியானே ஸ்லோன் என்ற ஆராய்ச்சியாளர்.

ஜெர்மனியை சேர்ந்த பரிணாம ஆய்வினை மேற்கொள்ளும் மேக்ஸ் ப்ளாங்க் நிறுவனத்தில் இவர் பணிபுரிகிறார். "நாங்கள் நியாண்டெர்தல் மற்றும் டெனிசோவன் இனங்கள் எப்போதாவது ஒன்று சேர்ந்ததில், அவர்களுக்கு குழந்தைகள் பிறந்தது என்பதை முந்தைய ஆய்வுகளின் மூலம் அறிந்திருந்தோம்" என்கிறார் விவியானே ஸ்லோன்.

ரஷ்யாவின் டெனிசோவா மலையில் இருவேறு உயிரினங்களின் குழந்தை வசித்தது கண்டறியப்பட்டுள்ளது

"ஆனால் அதை மெய்ப்பிக்கும் உண்மையான தடயத்தை கண்டுபிடித்த நாங்கள் மிகவும் அதிர்ஷ்டசாலி என்று நம்புகிறேன்" என்று தனது மகிழ்ச்சியை அவர் பகிர்ந்துக் கொள்கிறார்.

இந்த இரு உயிரினங்களும் நவீன மனிதர்களின் நெருங்கிய உறவினர்களாகக் கருதப்படுகின்றன. நவீன மனிதர்கள் ஆரம்ப காலங்களில் ஆப்பிரிக்காவிலிருந்து ஐரோப்பாவிற்கு வந்தபோது இந்த உயிரினங்கள் அழிந்து போயின.

Image result for Neanderthal)

கிட்டத்தட்ட 50 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்னர் ஐரோப்பா மற்றும் ஆசியா முழுவதும் நியாண்டெர்தல் (Neanderthal) இனம் பரவியதாக நம்பப்படுகிறது.

தற்போது வாழும் மனிதர்களில் ஆப்பிரிக்கர்களைத் தவிர்த்து அனைத்து மனிதர்களின் மரபணுக்களிலும் மிகச்சிறிய விகிதத்தில் நியாண்டெர்தல்களின் மரபணு காணப்படுகிறது.

அதேபோல, ஆஃபிரிக்கர்களை தவிர, வேறு சில நாடுகளில் வசிப்பவர்களும், டெனிசோவன் இனத்தை சேர்ந்தவர்களின் (ஆசிய மக்களின்) மரபணுவின் ஒரு பகுதியைக் கொண்டுள்ளனர்.

பல தலைமுறைகளாக இந்த குழுக்களிடையே ஏற்பட்ட உறவும், மரபணுவில் ஏற்பட்ட மாறுதல்களும், வெவ்வேறு இனங்களை சேர்ந்தவர்கள் இணைந்து குழந்தைகளை பெற்றிருக்கின்றனர்.

இருப்பினும், நியாண்டெர்தல் மற்றும் டெனிசோவன் இனங்களின் புதைபடிவ சான்றுகள் கண்டுபிடிக்கப்பட்ட ஒரே தளமான சைபீரியாவின் அல்தாய் மலைகளில் டெனிசோவா குகையில் காணப்படுகிறது.

Image result for Denisovan

மேலும்,20க்கும் குறைவான பழங்கால மனிதர்களில் அவர்கள் வெவ்வேறு இனங்களின் கலவையாக இருப்பது கண்டறியப்பட்டுள்ளது.

"இரு இனங்களின் கலப்பும் சமமான அளவில் இல்லை என்பது இந்த சான்றுகளில் கூறுகின்றன" என்று டாக்டர் ஸ்லான் பிபிசியிடம் கூறினார்.

இதுவரை மேற்கொண்ட பல ஆராய்ச்சிகளின் மூலம் , "நமது பரிணாம வரலாற்றில் மனிதர்கள் எப்போதுமே வெவ்வேறு இனங்களின் கலப்பாக இருப்பதை நாம் அறியலாம்" என்கிறார் அவர்.

நியாண்டெர்தல் மற்றும் டெனிசோவன் உயிரினங்கள் எங்கு வாழ்ந்தன?

இந்த இரண்டு உயிரினங்களும் நாற்பதாயிரம் ஆண்டுகளுக்கு முன்னர் வாழந்தனர்; நியாண்டெர்தல் மேற்கிலும், டெனிசோவன் கிழக்கிலும் வசித்தனர்.

நியாண்டெர்தல் கிழக்கு நோக்கி நகரத் தொடங்கியபோது, டெனிசோவனுடனும், தற்போதைய மனிதர்களின் ஆரம்பக்கால மூதாதையர்களுடனும் தொடர்பு ஏற்பட்டிருக்கலாம்.

நியாண்டெர்தல் மற்றும் டெனிசோவன் சந்திப்பதற்கு அதிக வாய்ப்புகள் கிடைத்திருக்காது என்று நினைக்கிறோம். ஆனால் அவர்கள் சந்தித்திருந்தால், நாங்கள் முன்னர் நினைத்ததை விடவும் அதிகமாக பல முறை தொடர்பு கொண்டிருப்பார்கள்" என்று நிறுவனத்தின் இயக்குநர் ஸ்வாந்தே பபோ கூறுகிறார்.

மகள் மற்றும் அவருடைய குடும்பம் பற்றி தெரிந்தது என்ன?

ரஷியன் தொல்பொருள் ஆய்வாளர்கள் டெனிசோவா மலைகளில் இருந்து பல ஆண்டுகளுக்கு முன்பு ஒரு எலும்பு துண்டை கண்டறிந்தனர். அந்த எலும்பை ஆய்வு செய்ததில் அது இருவேறு உயிரினங்களின் கலப்பில் பிறந்த குழந்தை என்று தெரியவந்த்து.

பின்னர் அந்த எலும்பு, மரபணு பகுப்பாய்விற்கான லீப்ஸிங்-கிற்கு (Leipzig) கொண்டு வரப்பட்டது.

"அது நீண்ட எலும்பின் ஒரு பகுதியாகும், அந்த எலும்புக்கு உரியவருக்கு தோராயமாக 13 வயது இருக்கும் என்று மதிப்பிடலாம்" என்று சொல்கிறார் டொரொண்டோ பல்கலைக்கழகத்தின் பென்ஸ் ஒயோலா கூறுகிறார்.

மேற்கு ஐரோப்பாவில் அந்த பெண்ணின் தாய் வசித்திருக்கலாம் என்பதற்கான மரபணு தடயங்கள் இருப்பதாக ஆராய்ச்சியாளர்கள் கணிக்கின்றனர்.

மேற்கு ஐரோப்பாவில் வசித்த நியாண்டெர்தல் இனத்தை சேர்ந்தவராக இருக்கலாம் என்றும், முன்னர் டெனிசோவா குகையில் வசித்த நியாண்டெர்தலின் மரபணுவுக்கு அதிக நெருக்கமாக இருந்தது என்று ஆராய்ச்சியாளர்கள் கண்டறிந்தனர்.

நியாண்டெர்தல் கிழக்கு நோக்கி நகரத் தொடங்கியபோது, டெனிசோவனுடன் இணைந்திருக்கலாம்.

ஆயிரக்கணக்கான ஆண்டுகளுக்கு முன்பு, நியாண்டெர்தல் உயிரினங்கள், தங்கள் பிரத்யேக அடையாளத்தை இழப்பதற்கு முன்னர் மேற்கில் இருந்து கிழக்கு ஐரோப்பா மற்றும் ஆசியாவை நோக்கி முன்னேறியதை இந்த ஆராய்ச்சிகள் உறுதி செய்கின்றன.

டெனிசோவ் இனங்களின் பாரம்பரியத்தில் குறைந்தபட்சம் ஒரு நியாண்டெர்தல் தடயம் இருப்பதை மரபணு ஆராய்ச்சிகள் சுட்டிக்காட்டுகின்றன.

ஆக இந்த ஆராய்ச்சிகள் கூற்றுப்படி வெல்வேறு இனக்கலப்பின் மூலமாக கூட மனிதன் உருவாகியிருக்க வாய்ப்பிருப்பதாக தெரிகிறது.

 
 

Advertisment

English Summary

"sex"! 50 thousand years ago

 
NewsFast Logo