சவூதி அரேபியாவில் மதம்சார்ந்த சட்டங்களால் பெண்கள் மிகவும் பாரபட்சமாக நடத்தப்பட்டு வந்தனர். இந்நிலையில், சவூதியின் மன்னராக பொறுப்பேற்ற முகம்மன் பின் சல்மான், பழமைவாத சட்டங்களை ஒவ்வொன்றாக புறம்தள்ளி பெண்களுக்கு சமஉரிமை என்ற பாதையைநோக்கி பீடுநடை போட்டு வருகிறார்.
இதனால், சர்வதேச அளவில் மன்னர் முகம்மது பின் சல்மானுக்கு பாராட்டுக்கள் குவிந்தாலும், சவூதியில் உள்ள கோடீஸ்வரர்கள், மன்னரின் நடவடிக்கைகள் இஸ்லாமிய மதச்சட்டங்களை நீர்த்துப் போகச்செய்யும்படி இருப்பதாக குற்றம்சாட்டியுள்ளனர்.
சவூதியில் பெண்கள் கார் ஒட்ட அனுமதி, நடனக்காட்சிகள், கால்பந்தாட்ட போட்டிகள் ஆகியவற்றை காணவும் அனுமதி என்று அடுத்தடுத்து பல நடவடிக்கைகளை மன்னர் முகம்மது-பின்-சல்மான் எடுத்து வருகிறார். இதனை விரும்பாத பழமைவாத இஸ்லாமியர்கள் பலரும், மன்னருக்கு எதிராக போர்க்கொடியை உயர்த்த தொடங்கியுள்ளனர்.
சவூதியில் 30 சதவீதம் இளைஞர்கள் இருப்பதாகவும், அவர்கள் சுதந்திரமாக வாழ விரும்புவதால், தாம் இந்த நடவடிக்கைகளை எடுத்துள்ளதாக மன்னர் முகம்மது பின் சல்மான் விளக்கம் அளித்துள்ளார்.
English Summary
Some Saudi Millennials Object To Young Prince's Easing Religious Rules