Advertisment

Punnagai Logo

உடல் உறுப்புகளை இழந்தவர்களுக்கு "விர்சுவவல் ரியாலிட்டி" தொல்நுட்பத்தின் மூலம் தொடும் உணர்வு..!

சுவிட்சர்லாந்து ஆராய்ச்சியாளர்கள் தங்களின் புது முயற்சியில், உடல் உறுப்புகளை இழந்தவர்களுக்கு மெய்நிகர் தொல்நுட்பத்தின் மூலம், தொடு உணர்வை ஏற்படுத்தி சாதனை படைத்துள்ளனர்.

விர்சுவவல் ரியாலிட்டி என அழைக்கப்படும்  மெய்நிகர் தொழில்நுட்பம், இல்லாத ஒன்றை இருப்பது போல காட்டும் தொழில்நுட்பம் ஆகும். பொழுதுபோக்கு மற்றும் குழந்தைகளுக்கான குதூகல விளையாட்டுக்காகவே இது பயன்படுத்தப்பட்டு வந்தது. 

அனால் தற்போது, விபத்துகளில் கை, கால்களை இழந்தவர்கள், தாங்கள் இழந்த உடல் பாகங்கள் உணரும் புதிய சாதனம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

சுவிட்சர்லாந்தின் லாசன்னே நகரில் ((Lausanne)) EPFL நிறுவனத்தைச் சேர்ந்த ஆராய்ச்சியாளர்கள் இதை வடிவமைத்துள்ளனர். இந்த சாதனத்தை கையில் பொருத்திக் கொண்டு, பிரத்யேக கண்ணாடியை அணியும்போது, நரம்புகள் தூண்டப்பட்டு தொடுஉணர்வை உணரலாம் என அவர்கள் கூறுகின்றனர்.

 
 

Advertisment

English Summary

Those who have lost their body organs feel the touch of "virtual reality"

 
NewsFast Logo