Advertisment

Punnagai Logo

இத்தாலியில் ரயில் தடம்புரண்டு விபத்து.. 2 பேர் பலி...

இத்தாலியின் மிலன் நகருக்கு அருகே சென்று கொண்டிருந்த ரயில் தண்டவாளத்தைவிட்டு விலகி விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில், 2 பேர் உயிரிழந்தனர். 100 பேர் காயம் அடைந்தனர்.

ட்ரிவில்கிளோவில் இருந்து புறப்பட்ட ரயில் பிலோட்டெல்லோ சென்றபோது, புறநகர் பகுதியில் திருப்பம் ஒன்றில் தண்டவாளத்தில் இருந்து கீழே இறங்கியது. இதில், 2 பேர் உயிரிழந்தனர். 100 பேர் காயம் அடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

5 பேர் நிலைமை கவலைக்கிடமாக உள்ளது. விபத்தைத் தொடர்ந்து, மீட்புப்பணிகள் துரிதப்பட்டு வருகின்றன. விபத்துக்கான காரணம் குறித்து விசாரணை நடத்தவும் உத்தரவிடப்பட்டுள்ளது.

 
 

Advertisment

English Summary

Train derailment kills 2 in Italy

 
NewsFast Logo