Advertisment

Punnagai Logo

நாங்க என்ன பாவம் செய்தோம்..? - சீனாவில், ஒரே நாளில் 38 ஆயிரம் பன்றிகள் கொன்று புதைப்பு..!

சமீபத்தில் சீனாவில், ஆப்பிரிக்கன் பன்றிக்காய்ச்சல் பரவுவதை அடுத்து, அதை தடுக்கும் வகையில் ஒரே நாளில் 38 ஆயிரம் பன்றிகள் கொல்லப்பட்டன.

முன்னதாக அந்நாட்டில் லியோனிங், ஹெனான், ஜியாங்சூ, ஜேஜியாங், அன்ஹு (( Liaoning, Henan, Jiangsu, Anhui and Zhejiang )) ஆகிய 5 மாகாணங்களில், கடந்த வாரம் இந்த நோயின் தாக்கம் கண்டறியப்பட்டது. பன்றிகள் மூலம் பிற விலங்குகளுக்கும், மனிதர்களுக்கும பரவுவதாக கண்டறியப்பட்டதை அடுத்து, பன்றி இறைச்சியைத் தவிர்க்குமாறு மக்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

Image result for pigs killed china

மேலும்,ஆப்பிரிக்க பன்றிக்காய்ச்சல் பாதிக்கப்பட்ட இந்த 5 மாகாணங்களிலிருந்து பிற மாகாணங்களுக்கு பன்றிகளையோ, பன்றி இறைச்சிகளை கொண்டு செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது. 

இது தவிர,பன்றி இறைச்சி கடைகளை அடைக்க ஆணையிடப்பட்டுள்ளது. குறிப்பிட்ட 5 மாகாணங்களில் 38 ஆயிரத்துக்கும் அதிகமான பன்றிகள் கொன்று புதைக்கப்பட்டன. மேலும், ஆப்பிரிக்கன் பன்றிக்காய்ச்சல் பரவுவதைத் தடுக்க அனைத்து நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும், மக்கள் அச்சமடையத் தேவையில்லை என்றும் அந்நாட்டு அரசு தெரிவித்துள்ளது.

 
 

Advertisment

English Summary

What have we done wrong? - In China, 38 thousand pigs killed in one day

 
NewsFast Logo