Advertisment

Punnagai Logo

சாரி, தெரியாம வந்துட்டேன் .! - பலியான பெண் போலீஸ்..!

அமெரிக்காவின் டெக்சாஸ் மாகாணத்தில் தமது வீடு என நினைத்து, மற்றொரு வீட்டுக்குள் நுழைந்த காவல்துறை அதிகாரி, அந்த வீட்டு உரிமையாளரைச் சுட்டுக் கொன்றதாகக் குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

முன்னதாக டல்லாஸில், அந்நாட்டு நேரப்படி வியாழனன்று இரவு பணி முடித்து தமது அடுக்குமாடிக் குடியிருப்புக்குச் சென்ற பெண் அதிகாரி, தமது வீடு என நினைத்து ஜீன் என்ற வேறொருவரின் வீட்டுக்குள் நுழைந்தார். அங்கிருந்த ஜீனை, தமது வீட்டுக்குள் தவறான நோக்கத்துடன் அத்துமீறி நுழைந்த நபர் எனக் கருதி,  துப்பாக்கியால் சுட்டு விட்டதாக காவல்துறைக்குத் தகவல் அளித்தார். ஆனால், மருத்துவமனைக்கு எடுத்துச் செல்லப்பட்ட ஜீன் உயிரிழந்தார்.

துப்பாக்கியால் சுட்டதாகக் குற்றம்சாட்டப்படும் காவல்துறை பெண் அதிகாரிக்கு நிர்வாக விடுப்பு அளிக்கப்பட்டுள்ள நிலையில், அவர் பெயர் வெளியிடப்படவில்லை. 

இருப்பினும் அவர் மீது கொலை வழக்கு பதியப்பட்டுள்ளது. சம்பவத்தின் போது பெண் அதிகாரியில் போதையில் இருந்தாரா என ஆய்வு செய்ய அவரது ரத்தமாதிரி சேகரிக்கப்பட்டுள்ளது.

உண்மையில் நடந்தது என்ன என்பது பூரண விசாரணைக்கு பின்பு தான் தெரிய வரும் என கூறப்படுகிறது,

 

 
 

Advertisment

English Summary

Wow, I'm not sure! - The victim's police ..!

 
NewsFast Logo